போடி அருகே கனமழையால் மண் சரிவு
போடி அருகே கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது;
போடி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்தது. இதனால் வடக்கு மலை பகுதியில் வலசை துறை அருகே அணைக்கரை பகுதியில் இருந்து உரல்மெத்து செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்கின்றனர். மண் சரிவால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.