போடி அருகேஆதரவற்றோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
போடி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.;
போடி அருகே தர்மத்துப்பட்டியில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? உணவின் தரம், கழிப்பிட வசதி போன்றவற்றை ஆய்வு செய்தார். அங்குள்ள ஆதரவற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி உடனிருந்தார்.
அதுபோல், பூதிப்புரம், வீரபாண்டி, கோடாங்கிபட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள், போ.மீனாட்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிட்டங்கியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அதன் அறை திறக்கப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அவர் பார்வையிட்டார்.