போடி அருகேஅ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

போடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் போடி அருகே சுந்தர்ராஜபுரம் காலனி பகுதியில் நடைபெற்றது.;

Update: 2023-04-22 18:45 GMT

போடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் போடி அருகே சுந்தர்ராஜபுரம் காலனி பகுதியில் நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் குறிஞ்சிமணி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மேலசொக்கநாதபுரம் பேரூர் செயலாளர் தொட்டப்பன், துனை செயலாளர் ராஜ்குமார், அவை தலைவர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், மற்றும் நிர்வாகிகள் வினோத்குமார், ராமையன், பொன்ராம், வெள்ளையன், அழகர், மகளிர் அணி செயலாளர் கலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்