அவல்பூந்துறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்;

Update: 2022-11-05 19:30 GMT

அவல்பூந்துறை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சுற்றி வளைப்பு

அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையத்தில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஈரோட்டில் இருந்து 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தார்கள். போலீசாரை கண்டதும் வண்டியை திருப்பிக்கொண்டு செல்ல முயன்றார்கள். உடனே போலீசார் உஷாராகி 3 பேரையும் சுற்றி வளைத்தார்கள்.

3 பேர் கைது

3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பிடிபட்டவர்கள் அறச்சலூர் ராசாம்பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29), வி.வி.சி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத் குமார் (22), ஈரோடு அக்ரஹார வீதியை சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) என்பதும் 3 பேரும் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து பொட்டலங்களாக்கி அந்த பகுதியில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்