ஆண்டிப்பட்டி அருகேகூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு:10 நாட்களாக வீணாக செல்லும் தண்ணீர்

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்களாக தண்ணீர் வீணாகிறது.

Update: 2023-03-16 18:45 GMT

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரப்படித்தேவன்பட்டி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் க.விலக்கு அருகே உள்ள பிஸ்மி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகி வருகிறது.

இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் தண்ணீர் சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசு நிலத்தில் வீணாக பாய்ந்து வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் வைகை, முல்லைப்பெரியாறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்