அந்தியூர் அருகே குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

முகாம்

Update: 2023-02-22 20:15 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட ஜி.எஸ்.காலனி சமத்துவபுரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அப்போது குழந்தைகளுக்கு எடை அளவு பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உணவு முறைகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து, தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் உண்ணக்கூடிய சத்தான உணவுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் சுகாதார செவிலியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்