அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் பகுதியில் அய்யப்ப சாமி கோவில் உள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கெட்டிசமுத்திரத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அய்யப்ப சாமி டிராக்டரில் வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது அய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி ஊர்வலத்தின் முன்னே சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து சாமியை பயபக்தியுடன் வழிபட்டனர். கோவிலை சென்றடைந்ததும், அங்கு படி பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.