அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது

Update: 2023-06-23 20:11 GMT

அந்தியூர் அருகே உள்ள கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு நேற்று அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. சுமார் 76 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் ஆடு தத்தளிப்பதை பார்த்த வைரமணி உடனே இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்