அந்தியூர் அருகே குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
அந்தியூர் அருகே குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தியை சேர்ந்தவர் பகவதி. இவர் வளர்த்து வரும் பசுமாடு நேற்று மாலை வேம்பத்தி ஏரி பகுதியில் மேய்ந்துகொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு குழியில் பசுமாடு தவறி விழுந்துவிட்டது.
இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு ஓடிய பகவதி, மாடு குழியில் விழுந்து கிடப்பதை பார்த்து உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி குழியில் இருந்து பத்திரமாக உயிருடன் பசுமாட்டை மீட்டனர்.