அம்மாபேட்டை அருகே தொடர் மழையால் தோன்றிய திடீர் அருவி

திடீர் அருவி;

Update: 2022-10-31 19:30 GMT

சேலம் மாவட்டப் பகுதியில் தொடங்கி ஈரோடு மாவட்டத்தில் முடியும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் பகுதியாக அம்மாபேட்டை அருகே பாலமலை உள்ளது. பாலமலையில் நெரிஞ்சிபேட்டை, சின்னப்பள்ளம், ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், கண்ணாமூச்சி போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் உள்ளது. இவற்றில் மழை காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும்.

இந்த நிலையில் பாலமலையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் இந்த பள்ளங்களில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு போய் கிடந்தது. தற்போது கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக பாலமலையை சுற்றி சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது.

இது குறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறும் போது, 'அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப்பாறையில் உள்ள அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதில் குளிப்பதற்காக ஈரோடு, சேலம் மாவட்டத்தில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு செல்லும் பாதையை சீரமைத்தால் இப்பகுதி சுற்றுலா தலமாக மாற வாய்ப்பு உள்ளது.' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்