தஞ்சைக்கு தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு
தஞ்சைக்கு தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளதால். கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
தஞ்சாவூர்;
தஞ்சைக்கு தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளதால். கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெயிலின் தாக்கம்
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பழங்கள், குளிர்பானங்கள் அதிக அளவு வாங்கி செல்கிறார்கள்.தஞ்சையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது.
தர்பூசணி பழங்கள் வரத்து
தற்போது , புதுக்கோட்டையிலிருந்து மினி வேனில் தர்பூசணி பழங்கள்கொண்டு வரப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, சிவகங்கை பூங்கா போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பழ வியாபாரி கூறியதாவது:- வழக்கமாக ஜூலை மாதத்துடன் தர்பூசணி பழ விற்பனை முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தர்பூசணி பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். புதுக்கோட்டையிலிருந்து தர்பூசணி பழங்களை வாங்கி, 1 கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.