என்.சி.சி. தினத்தையொட்டி மருத்துவ மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி. தினத்தையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கிக்கு, என்.சி.சி. மருத்துவ மாணவர்களும், என்.சி.சி. அதிகாரிகளும் ரத்ததானம் செய்தனர்.;

Update: 2022-11-27 20:06 GMT


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்.சி.சி. (தேசிய மாணவர் படை) தினம் கொண்டாடப்படுகிறது. மதுரை அரசு மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நேற்று என்.சி.சி. தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கிக்கு, என்.சி.சி. மருத்துவ மாணவர்களும், என்.சி.சி. அதிகாரிகளும் ரத்ததானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை டீன் ரத்தினவேல் செய்து கொடுத்தார். மதுரை மருத்துவ கல்லூரியின் என்.சி.சி.அதிகாரிகள் செல்வராஜன், டாக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவ மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். இதில், என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல், என்.சி.சி. தினத்தினையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்