நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்
நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம் நடந்தது.
நாசரேத்:
நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நாசரேத் பொது நூலகத்தில் தியாகிகள் வ. உ.சி., பாரதியார், விவேகானந்தர் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதை தாகம் என்னும் தலைப்பில் இலக்கிய கூட்டம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் ரா. செல்வமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் தலைவர் காசிராஜன், ஆசிரியர் அருள்ராஜ், சிறுகதை எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், ஆசிரியர் செல்வன், மூக்குப்பேறி கிராம தமிழ் மன்ற தலைவர் நாகராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் ஐயா குட்டி மற்றும் நிர்வாகிகள், நூலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வள்ளுவர் வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜெபசிங் நன்றி கூறினார்.