நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு

தியாகதுருகம் நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.;

Update: 2022-09-27 18:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலுவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு நவராத்திரி கொலுவின் முதல் நாளான நேற்று  முன்தினம் 11- படிகள் அமைத்து அதில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சாமிகள் முப்பெரும் தேவியாக ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்