அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடைபெற்றது.;
தாயில்பட்டி ஊராட்சி கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருநீறு, சந்தனம், குங்குமம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல வன மூர்த்திலிங்காபுரம் காளியம்மன் கோவில், விஜயகரிசல்குளம் துர்க்கை அம்மன் கோவில், காளியம்மன் கோவில், வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில், மார்க்கநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் சுந்தாளம்மன், செல்லியம்மன் கோவில், உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்றது.