சென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
லளிகம் கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.;
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, வன்னிமரம் குத்துதல், சென்றாய பெருமாள் சாமி, பாலதண்டாயுதபாணி சாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன், குறிஞ்சி மாரியம்மன், விநாயகர், பொன்னியம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தொடர்ந்து சாமிகள் வீதி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.