தேசிய ஒற்றுமை தின சைக்கிள் ஊர்வலம்
அரக்கோணத்தில் தேசிய ஒற்றுமை தின சைக்கிள் ஊர்வலம் நடந்தது.;
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் 147-வது பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புப் படை வாளாகத்தில் இருந்து தக்கோலம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை மீட்பு படை கமாண்டண்ட் அருண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.