ஊட்டி
குன்னூர் அருகே ஜெகதளா பகுதியில் நீரோடையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் எம்.ஆர்.சி. முகாமை சேர்ந்த ராணுவ வீரர்கள், தேசிய மாணவர் படையினர் ஈடுபட்டனர். புனித சாகர் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த பணியின்போது, 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தேசிய மாணவர் படையினருக்கு, ராணுவ அதிகாரிகள் விளக்கி பேசினர். மேலும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.