தேசிய விளையாட்டு தின கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கல்லூரியில் தேசிய விளையாட்டு தின கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update:2023-09-01 00:30 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய ஆக்கி அணி தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான பிலிப்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆங்கில துறை தலைவர் சண்முகப்பிரியா வரவேற்றார். 'விளையாட்டு கலாசாரம்' என்ற தலைப்பில் பேராசிரியர் ஆறுமுகம் பேசினார். முடிவில், பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் குருசித்திர சண்முக பாரதி, பால் மகேஷ், பேபி மாலினி, மீனாட்சி, முருகன், துரை லிங்கம், சாம்சன் லாரன்ஸ், மாரி செல்வம், ராஜேஷ் கண்ணா, மாரியம்மாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்