டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.;

Update:2023-09-03 00:15 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வகுப்புகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி 4 நாட்கள் நடந்தது. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நிர்வாகவியல் உதவி பேராசிரியர் தர்மபெருமாள் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில், ஆண்கள் பிரிவில் தலா 7 அணிகளும், பெண்கள் பிரிவில் தலா 5 அணிகளும் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் பிரிவில் பி.பி.எட். 2-ம் ஆண்டு மாணவர்களும், பெண்கள் பிரிவில் பி.பி.எட் முதலாமாண்டு மாவியர்களும் வெற்றி பெற்றனர்.

பின்னர், கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். பி.பி.எஸ் 3-ம் ஆண்டு மாணவி திவ்ய பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை பி.பி.எஸ். 3-ம் ஆண்டு மாணவி ராம புவனேஸ்வரி அறிமுக உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் உடற்கல்வியியல் கல்லூரி முன்னாள் செயலாளர் மற்றும் முதல்வர் சாய்குமார் கலந்துகொண்டு வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பி.பி.எஸ் 3-ம் ஆண்டு மாணவர்கள் முகேஷ் கண்ணா, ரஞ்சித்குமரன் பொன்னாடை அனுபவித்து, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சிகளை மாணவி கீர்த்தனா செல்வி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பி.பி.எஸ் 3-ம் ஆண்டு மாணவர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் நெல்சன் துரை, பி.பி.எஸ் 3-ம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் மற்றும் வாலிபால் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்