தேசிய மக்கள் நீதிமன்றம்

சிவகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.;

Update: 2023-05-13 19:34 GMT

சிவகிரி;

சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் லோக் அகாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நீதிபதி ஜெய காளீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் கிரிமினல் சம்பந்தமாக 203 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்ட ன. அவற்றில் 119 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

இதேபோல் சிவில் வழக்கு சம்பந்தமாக 85 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 10 வழக்குகள் முடிக்கப்பட்டன. மொத்தம் 129 வழக்குகளின் மூலமாக 7 லட்சத்து 86 ஆயிரத்து 293 ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்