வால்பாறையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

வால்பாறையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

Update: 2022-09-29 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் வால்பாறை பகுதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் வனப் பகுதியில் உள்ள உடுமன்பாறை மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய திட்ட அலுவலர் ரதிபிரியா பெண் கல்வி அவசியம், இளம் பெண்கள் திருமணத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சினை குறித்து விளக்கினார்.கர்ப்பிணி பெண்களும் தாய்மார்களும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.வீடுகளில் காய்கறி தோட்டங்கள் அமைத்து பச்சை காய்கறிகள் அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.பெண்கள் கண்டிப்பாக தன் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும்.சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்க முன் வரவேண்டும் என்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி மையத்தின் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்