மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி: தமிழக அணிக்கு 17 வீரர்கள் தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கபடி போட்டிக்கு தமிழக அணிக்கு 17 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-09-11 00:00 IST

தேசிய அளவிலான கபடி போட்டி

5-வது தேசிய அளவிலான சீனியர் ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாட வீரர்கள் தேர்வு பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 32 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 64 மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் நன்றாக விளையாடிய தென்காசியை சேர்ந்த மகேஷ், பெரம்பலூரை சேர்ந்த ரமேஷ், சேலத்தை சேர்ந்த பிரவீன்குமார், மணிகண்டன், திருச்சியை சேர்ந்த வரதராஜ், கரூரை சேர்ந்த நந்தகுமார், அன்பழகன், விமலேஷ், கோகுல், அரியலூரை சேர்ந்த கார்த்திக், காஞ்சீபுரத்தை சேர்ந்த மோகன், மகேஷ், ராம்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ், மதுரையை சேர்ந்த சேது, சந்தோஷ், திருநெல்வேலியை சேர்ந்த சரவணகுமார் ஆகிய 17 வீரர்கள் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அணி முதலிடம்

அணியின் கேப்டனாக தென்காசியை சேர்ந்த மகேசும், துணை கேப்டனாக பெரம்பலூரை சேர்ந்த ரமேசும் தேர்வு செய்யப்பட்டனர். மேற்கண்ட வீரர்களை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு ஒருங்கிணைப்பாளார் கலைச்செல்வன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தேசிய அளவில் கடந்த 4 முறை நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டியில் தமிழக அணி தான் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்