குப்பை தொட்டியில் வீசப்பட்ட தேசியக்கொடிகள்

நொய்யல் பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட தேசியக்கொடிகளால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.;

Update: 2022-08-21 18:37 GMT

தேசியக் கொடி ஏற்றினர்

கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குசாலை, மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் , நல்லிக்கோயில், புன்னம் சத்திரம், புன்னம், பேச்சிப்பாறை, மூலிமங்கலம், காகிதபுரம், பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, கோம்புப்பாளையம், தளப்பாளையம், தோட்டக்குறிச்சி, புகழூர், மூர்த்தி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடந்த 13-ந்தேதி அன்று தேசியக்கொடியினை அந்தந்த பகுதியில் ஏற்றி வைத்தனர்.

குப்பை தொட்டியில்...

இந்நிலையில் ஆகஸ்டு 21-ந்தேதி ஆகியும் நேற்று வரை பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், சாலை ஓரத்தில் உள்ள இரும்பு கம்பிகள் மற்றும் வீடுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த தேசியக் கொடிகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேசியக் கொடிகள் குப்பை தொட்டியில் போடப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது.இந்திய தேசத்தின் கொடியான தேசியக்கொடி தொடர்ந்து இதுபோன்ற செயல்களால் அவமதிக்கப்படுகிறது. பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தேசியக் கொடியினை வழங்கிய ஊராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் மூலம் தேசியக்கொடி கொடுக்கப்பட்டவர்களிடமிருந்து தேசியக் கொடியை வாங்கி அந்த தேசியக் கொடியை பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்