வீடு தோறும் தேசிய கொடி ஏற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள்

திப்பனப்பள்ளி கிராமத்தில் வீடு தோறும் தேசிய கொடி முன்னாள் ராணுவ வீரர்கள் ஏற்றினர்.;

Update: 2022-08-14 18:13 GMT

குருபரப்பள்ளி

சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, சத்தியா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சின்னப்பா சின்ராஜ், சாமு, சின்னப்பன், கிருஷ்ணன் பார்த்திபன், ராஜேந்திரன், சூரியகுமார், ராமன், ராமச்சந்திரன், தேவேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கைகளில் தேசிய கொடிகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்று தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றினர்.

மேலும் திப்பனப்பள்ளியில் உள்ள ராணுவ சிப்பாய் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதேபோல் தாசரிப்பள்ளி, கும்மனூர் உள்ளிட்ட கிராமங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, தலைமையில் ஊர் கவுண்டர் கிருஷ்ணன் முன்னிலையில் காந்தி இளைஞர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்வலமாக சென்று வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் காந்தி இளைஞர் மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், ரஜினி, கருணாகரன் முனிரத்தினம் மற்றும் ஊர் பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் அசோக், சத்யராஜ், கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்