கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது
கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.;
கொரடாச்சேரி;
கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
தேசிய கல்விக்கொள்கை
தேசியக் கல்விக்கொள்கை 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தேசியக் கல்விக் கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாடத்தில் இருக்கும் கல்வியை கற்று பதவியை அடைந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? அப்படி கற்றுக் கொண்ட விஷயத்தில் என்ன புதுமையை கண்டுபிடிக்கின்றோம்? அது மக்களுக்கு எப்படி போய் சேர்கிறது? போன்றவை தான் முக்கிய கருத்தாக கருதப்படுகிறது.
நோக்கம்
கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஒரு மாணவர் ஒரு பல்கலைக்கழகத்திலோ ஒரு கல்லூரியிலோ அல்லது ஒரு பள்ளியிலோ படிக்கும் போதுதனது பாடத்தை மட்டுமின்றி தனது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.இதுவே தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம். அந்த வகையிலான திறன் மேம்பாடு குறித்து தான் இதில் கூறப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு எங்கே உருவாக்கப்பட வேண்டும் என்பது கல்லூரிகளில் மட்டுமல்ல பள்ளிகளில் இருந்து உருவாக வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.இவ்வாறு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.