மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவோடு காலை சிற்றுண்டி கொடுக்கவும் வலியுறுத்துகிறது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-15 13:23 GMT

சென்னை,

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார்.

இந்த நிலையில்,தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்