தேசிய மருத்துவர் தின விழா
வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர்சாதிக் தலைமை தாங்கினார். செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார். பொருளாளர் வி.எல்.ராஜன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார், வழூர் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆனந்தன், நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் காளிச்செல்வம், டாக்டர் ரேவதி ஆகியோர் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவம் பற்றி விளக்கி கூறினார்கள்.
வக்கீல் இரா.மணி பங்கேற்று, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு செயல்பாடுகளை பற்றி விளக்கி பேசினார்.
இதில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை துணை தலைவர்கள் பா.சீனிவாசன், மு.பிரபாகரன், முன்னாள் பொருளாளர் சீ.கேசவராஜ், சதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் செவிலியர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.