தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சிக்கு வந்தனர்
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சிக்கு வந்தனர்.;
திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சிக்கு வந்தனர். அவர்கள் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். அவர்களை கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சந்தித்து, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கருடமண்டபம் அருகில் காவிரி ஆற்றின் கரையில் வசிப்பவர்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கையினை எடுத்துக்கூறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கலெக்டர் நேரில் சென்று அறிவுறுத்தினார்.