நாராயண சுவாமி கோவில் பால்முறை திருவிழா
சந்தையடியூர் நாராயண சுவாமி கோவில் பால்முறை திருவிழா நடைபெற்றது.;
உடன்குடி:
உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் அய்யா நாராயணசுவாமி கோவிலில் கடந்த 11-ந் தேதி பால்முறைத் திருவிழா தொடங்கியது. அன்று இரவு அய்யா அன்னவாகனத்தில் பவனி நடந்தது. நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு நாக வாகனத்தில் அய்யா பவனி, மாலை 3 மணிக்கு தருமம் எடுத்தல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு தீப வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு உம்பான் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கருட வாகனத்தில் பவனி, இன்று(சனிக்கிழமை) அனுமார் வாகனத்தில் அய்யா பவனி வருதலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) பால் வைத்தலும், அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அய்யா பவனியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யா வழி இறைமக்கள் செய்துள்ளனர்.