நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யாகணபதி யாகம்
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யாகணபதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு, கேது பரிகார ஸ்தலமான ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன், நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மகா வித்யா கணபதி யாகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கணபதி யாகத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, 12 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.