நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
மெஞ்ஞானபுரம:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு மதியம் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மஞ்சள், பல்வேறு மணப்பொடி, பால், தயிர், இளநீர் பன்னீர் விபூதி சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், உலகமக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குழுக்கள் முறையில் 2 பேருக்கு தங்க காசும், 5பேருக்கு சேலை, மற்றும் குத்துவிளக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.