நாங்குநேரி சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது - திமுக எம்.பி. கனிமொழி

பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வெட்டிய சம்பவம் வேதனை அளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-11 16:33 GMT

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வெட்டிய சம்பவம் வேதனை அளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன்.என தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்