சிவலோகநாத சுவாமி கோவிலில் நந்தனார் குருபூஜை

திருப்பன்கூர் சிவலோகநாத சுவாமி கோவிலில் நந்தனார் குருபூஜை நடந்தது.

Update: 2023-10-05 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கணபதி நகரை சேர்ந்த வசுபதி மகன் விக்னேஷ் (வயது 26).இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்தி செல்ல முற்பட்டார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதி நிலை தடுமாறி அரசு பஸ்சின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட விக்னேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்