கருணாநிதி சிலை திறப்பு கல்வெட்டில் அதிமுக கவுன்சிலர்கள் பெயர்... கடும் வாக்குவாதம் - மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.;
சேலம்,
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் துவக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன் பேச துவங்கினார். அப்போது சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு நாளில் கல்வெட்டில் அதிமுக கவுன்சிலர் உட்பட 60 கவுன்சிலர்களின் பெயர்களையும் பொறிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயரிடம் முறையிட்டார். உடனே எழுந்த அதிமுக கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தமிழக முதல்வர் பற்றி அதிமுக கவுன்சிலர்கள் பேசியதால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசமுடியாமல் திணறிய அதிமுக கவுன்சிலர்கள், தமிழக சட்டம் ஒழுங்கை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.