நாமக்கல்: தேசிய கீதத்திற்கு அவமரியாதை - சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்..!
தேசிய கீதம் இசைக்கப்படும்போது சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் செல்போனில் பேசிய வீடியோ வைரலாக பரவியது.
நாமக்கல்,
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அப்போது, விழாவில் இருந்த அனைவரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார்.
போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோர் வைரலானது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதைஅடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.