நாமக்கல் கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-10-08 22:26 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

பெத்தநாயக்கன்பாளையம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகள் ஷர்மிளா (வயது 19). இவர் நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி அவர் திடீரென வீட்டில் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷர்மிளா பலியானார். இதுகுறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்