நாமக்கல்பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2023-01-23 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்