நல்லமாடசாமி கோவில் கொடை விழா

நல்லமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.;

Update: 2023-07-28 19:30 GMT

இட்டமொழி:

காரியாண்டி ராமகிருஷ்ணாபுரம் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நல்லமாடசாமி கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் காப்பு கட்டுதல், நல்ல மாடசாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜைகள், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2-ம் நாள் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து பக்தர்கள் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு சாமக்கொடை ஆகியன நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நல்ல மாடசாமி கோவில் விழா கமிட்டிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்