நாகர்கோவில்-கொச்சுவேலி பயணிகள் ரெயில் 11-ந்தேதி முதல் மீண்டும் இயக்கம்
நாகர்கோவில்-கொச்சுவேலி பயணிகள் ரெயில் 11-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.;
நாகர்கோவில்:
நாட்டில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட கொச்சுவேலி பயணிகள் ரெயில் வருகிற 11-ந் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும். அதே சமயம் மறுமார்க்கத்தில் மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.