நாகர்கோவில்-கோவை ரெயில் 2¾ மணி நேரம் தாமதம்
நாகர்கோவில்-கோவை ரெயில் நெல்லைக்கு 2¾ மணி நேரம் தாமதமாக வந்தது.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் -திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பகல் நேர ரெயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தாமதமாக புறப்பட்டது. இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு காலை 8.45 மணிக்கு வரவேண்டிய அந்த ரெயில் 2.46 மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 10.31 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 10.38 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அடுத்தடுத்த ரெயில் நிலையங்களுக்கு தாமதமாக சென்றது. மேலும் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 1 மணி நேரம் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கோவைக்கு ரெயில் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.