நாகம்பட்டி பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாகம்பட்டி பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்;

ஓட்டபிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., 136 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாத்துரை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் வேல்வெள்ளைச்சாமி நாடார் நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பச்சை பாண்டியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து 10 கர்ப்பிணி பெண்களுக்கு தாய்- சேய் நலப்பெட்டகத்தை வழங்கினார். முகாமில் ஆயிரத்து 208 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சத்தான காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்