நாகம்பட்டி மனோ கல்லூரியில் தமிழ்மன்றம் தொடக்க விழா
நாகம்பட்டி மனோ கல்லூரியில் தமிழ்மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் மன்றம் தொடக்கம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். மாணவி மாலதிசெல்வி வரவேற்று பேசினார். ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கினார். மாணவர் சுபாஷ் நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.