நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்தில் செல்வராஜின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.;
சென்னை,
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (67 வயது) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திருவாரூர் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜ், 1989 முதல் தொடர்ச்சியாக 7 முறை நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்தார்.
அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் உடல் நல்லடக்கம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் செல்வராஜின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.