நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஆய்வு

விளாத்திகுளம் அருகே நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-02-25 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே புதூர் வட்டாரத்தில் நபார்டு வங்கியின் நிதி உதவி மற்றும் மக்கள் பங்கேற்புடன் விளாத்திகுளம் விடியல் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் சின்னூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. நெல்லை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், நபார்டு வங்கியின் கள ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் சின்னூர் கிராம நீர் வடிப்பகுதி குழுவினால் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகள், கசிவு நீர் குட்டைகள், மற்றும் தடுப்பணைகள் ஆகிய பணிகளை ஆய்வு செய்து நீர் வடிப்பகுதி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் விவசாய சாகுபடி அதிகரித்துள்ளது எனவும் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் என தெரிவித்தனர்.

ஆய்வின் போது விடியல் டிரஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி, திட்ட மேலாளர்கள் செந்தில்குமார், அசோக்குமார், மகாதேவன், அலுவலக பணியாளர்கள் சக்திதேவி, புஷ்பராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்