மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

பேட்டை அருகே மர்மமான முறையில் மயில் இறந்து கிடந்தது.

Update: 2022-06-01 19:28 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை குன்னத்தூர் மாரியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை மயிலானது மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மயிலை கைப்பற்றினர். மயில் பறந்து சென்றபோது மின் கம்பிகளில் பட்டு மின்சாரம் பாய்ந்து இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்