மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மவிலங்கு கடித்து 30 கோழிகள் சாவு

மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 30 கோழிகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.;

Update:2022-05-26 23:29 IST

மேலகிருஷ்ணன்புதூர், 

மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 30 கோழிகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

30 கோழிகள் சாவு

மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலைபுதூரில் 2 ஏக்கர் நிலத்தில் பண்ணை வைத்துள்ளார்.

இங்கு ஆடு, மாடு, நாட்டு கோழிகள் உள்ளன. இந்த பண்ணையில் 12 அடி உயரத்தில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் பண்ணைக்குள் மேய்ந்து கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கோழிகள் கழுத்தில் காயத்துடன் நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டு பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம விலங்கு கடித்ததா?

இறந்து கிடந்த அனைத்து கோழிகளின் கழுத்து பகுதியில் காயங்கள் தென்பட் டன. எனவே கோழிகளை மர்ம விலங்கு கடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆத்திக்காட்டு விளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

இதே பண்ணையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 5 ஆடுகள் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்த தகவலை அறிந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்