தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் களைகட்டிய தெப்பத் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-07 17:33 GMT

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கிய தெப்பத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.

தெப்ப உற்சவத்தின் கடைசி நாளான இன்று, 7 மணியளவில் தெப்ப ஊர்வலம் வெகு விமரிசையாக தொடங்கியது. சுவாமி கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்கார வேலன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கோவில் குளத்தைச் சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், தெப்பத்தை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரித்திருந்தனர். இந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்