முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-02 18:45 GMT

திருத்துறைப்பூண்டி,:

கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமி வீதி உலா மற்றும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்று வருகிறது.

தெப்ப உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது முன்னதாக காலையில் திரளான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளில் வழியாக வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து கோவில் அருகில் உள்ள குளத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் தெப்பம் குளத்தில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கொக்கலாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்