ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்கள் - சென்னையில் இருந்து புறப்பட்டனர்

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழுவினரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.;

Update:2023-06-08 04:50 IST

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், நிக்கோபாரில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 4 ஆயிரத்து 161 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல் 128 பெண்கள் அடங்கிய 254 பேர் கொண்ட முதல் குழுவினர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழுவினரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.


Full View


 

Tags:    

மேலும் செய்திகள்